சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகர காவல் துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 29, 2020

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5,300 பேர் விண்ணப்பம்: சென்னை மாநகர காவல் துறை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள், தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதற்காக, வதந்தி பரப்பியவர்கள் என கடந்த 4 நாட்களில் 14 ஆயிரத்து 815 வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்நிலையில், அவசர பயணம் மேற்கொள்வோருக்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்ணை தமிழக அரசு நேற்று அறிவித்தது.  இதன்படி, 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.  கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு தொடர்பு கொள்ளலாம்.

சென்னைக்குள்ளேயோ, மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையோ செல்ல நேரிட்டால் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல சுமார் 5 ,300 பேர் விண்ணப்பித்துள்ளனர் என சென்னை மாநகர காவல் துறை தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், அவசரத் தேவைக்காக பயணம் மேற்கொள்ள அனுமதிகோரி 5 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 அவற்றில் 25 மட்டுமே அனுமதிக்க தகுதியானவை என மாநகர காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம் செய்தவர்கள் நேரில் அழைக்கப்பட்டு அவர்கள் செல்லும் ஊரில் உள்ள காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவலை உறுதி செய்த பின்னர் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பயணம் மேற்கொள்ள ஒப்புதல் அளித்த நபர்களுக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment