கொரோனா வைரஸ் எதிரொலி:தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 13, 2020

கொரோனா வைரஸ் எதிரொலி:தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள தொடக்க பள்ளிகளுக்கு மார்ச் 31 வரை விடுமுறை

கரோனா பரவல் அச்சத்தின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக வெள்ளிக்கிழமை  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் முழுவதும் உள்ள எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு வரும் 16-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

அதேபோல் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள குமரி, கோவை, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் மட்டும் இந்த விடுமுறையானது 5-ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்படுகிறது

இதுதொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment