அவசரத் தேவைக்காக வெளியூர் செல்ல அனுமதி வழங்கும் வசதியை காவல்துறை அறிமுகப்படுத்தியது. ஆனால், இத்திட்டத்தை பொதுமக்கள் தவறாகப் பயன்படுத்துவதாகவும், அவசியத் தேவைக்கு விண்ணப்பிப்பவர்கள் பாதிக்கப்படுவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் சென்னை காவல்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது சென்னையில் சிக்கியுள்ளவர்கள் மற்ற மாவட்டங்களுக்குச் செல்ல அவசியத் தேவை இருப்பின் விண்ணப்பித்து அனுமதி பாஸ் பெறலாம் என அறிவித்து அதற்கான வாட்ஸ் அப் எண், மெயில் ஐடியை வெளியிட்டது.
இதற்காக துணை ஆணையர் ஜெயலட்சுமி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனிக் கட்டுப்பாட்டு அறையும் தொடங்கப்பட்டு 30க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்தக் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வருகின்றனர்.
அவசரத் தேவைக்காக சென்னையை விட்டு வெளியூர் செல்வதற்காக 8,300 பேர் 2 நாளில் விண்ணப்பித்துள்ளனர். அதில் 115 பேருக்கு விசாரணை நடத்தி, நோய்த்தொற்று எதுவும் இல்லை என உறுதிப்படுத்திய பின் சென்னை காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இதில் விண்ணப்பிப்பவர்கள் அவசரத் தேவைக்காக குறிப்பாக திருமணம், நோய்வாய்ப்பட்ட உறவினர், கர்ப்பிணி மனைவி, ஆதரவற்ற நிலையில் உள்ள பெற்றோர் உள்ளிட்டோரைச் சந்திக்க முடியாமல் இருக்கும் நபர்கள், முக்கிய பணத்தேவை, தனியாக சென்னையில் வாடுவோர் போன்றோரும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் விண்ணப்பங்களில் ராஜஸ்தான், பிஹாரிலிருந்து சென்னை வர அனுமதி கேட்டும், மற்ற மாவட்டங்களிலிருந்து சென்னக்கு வர அற்ப காரணங்களுக்காக அனுமதி கேட்டும் விண்ணப்பங்கள் அதிக அளவில் குவிந்துள்ளதால் போலீஸார் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
தேவையில்லாத காரணங்களுக்காக வெளியூர் செல்ல அனுமதி கேட்டு விண்ணப்பித்தவர்களால் உண்மையான தேவையுடையவர்களின் மனுக்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
துணை ஆணையர் ஜெயலட்சுமி கையெழுத்திட்டு அனுமதி பாஸ் வழங்கும் பணி 2 நாட்களாக நடந்து வருகிறது. இதில் வாட்ஸ் அப், மெயில் ஐடியில் விண்ணப்பித்தவர்களுக்கு உங்கள் விண்ணப்பம் பரிசீலனையில் உள்ளது என்கிற பதில் கூட இல்லாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்தனர்.

No comments:
Post a Comment