சென்னையில் குறிப்பிட்ட 9 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 29, 2020

சென்னையில் குறிப்பிட்ட 9 இடங்களில் வசிக்கும் மக்களுக்கு மாநகராட்சி எச்சரிக்கை!

சென்னையில் மேற்கு மாம்பலம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று பரவ அதிக வாய்ப்பு உள்ளதால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம், சாந்தோம், ஆலந்தூர், போரூர், கோட்டூர்புரம் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகையால், அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என தெரிவித்துள்ள மாநகராட்சி நிர்வாகம் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என தெரிவித்துள்ளது.


 மேலும், அப்பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதிகளையும், எண்ணிக்கையும் சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டிருக்கிறது.

 அதன்படி, சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம் உட்பட பிரிக்கப்பட்டுள்ள அண்ணாநகர் பகுதிக்குள்ளாக 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் உட்பட கோடம்பாக்கம் பகுதிக்குள்ளாக 5 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

 இதுதவிர போரூர் உட்பட வளசரவாக்கத்தில் 2 பேரும், தேனாம்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையார் ஆகிய பகுதிகளில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment