ATM வழியாக உங்கள் JIO எண்ணை ரீசார்ஜ் செய்வது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 31, 2020

ATM வழியாக உங்கள் JIO எண்ணை ரீசார்ஜ் செய்வது எப்படி?


21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் ரீசார்ஜ் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாமல் தவிப்போருக்கு உதவும் வகையில், அருகில் உள்ள ஏடிஎம் மையத்துக்குச் சென்று அங்கேயே உங்கள் ஜியோ மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்யமுடியும்.


ஏ.டி.எம் வழியாக உங்கள் ஜியோ எண்ணை ரீசார்ஜ் செய்வது எப்படி?

1. உங்கள் அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று டெபிட் அல்லது கிரெடிட் கார்டை ஏடிஎம் இயந்திரத்தில் சொருக வேண்டும்.

2. அடுத்ததாக மெனுவில் இருந்து Recharge என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

3. உங்கள் JIO தொலைபேசி எண்ணை உள்ளிட்ட பிறகு, OK / ENTER பொத்தானை அழுத்தவும்.

4.இப்போது உங்கள் 4 இலக்க ATM PIN நம்பரை உள்ளிடுங்கள்.


5. எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமோ அந்த தொகையை சரியாகப் பதிவிடுங்கள்.

6. ENTER பட்டனை அழுத்துங்கள்.

7. ஏடிஎம் இயந்திரத்தின் ஸ்க்ரீன் இப்போது ரீசார்ஜ் செய்தியைக் காண்பிக்கும். அதனுடன் தொடர்புடைய தொகை உங்கள் வங்கி கணக்கிலிருந்து கழிக்கப்படும். அதை தொடர்ந்து, உங்கள் ஜியோ மொபைல் எண்ணில் குறிப்பிட்ட ரீசார்ஜிற்கான உறுதிப்படுத்தல் மெசேஜைப் பெறுவீர்கள், அவ்வளவுதான்!

இந்த வசதி AUF Bank, Axis Bank, DCB Bank, HDFC Bank, ICICI Bank, IDBI Bank, IDFC Bank, Standard Chartered Bank மற்றும் State Bank of India போன்ற வங்கிகளில் மட்டும் தற்போதைக்கு கிடைக்கும் என்று ஜியோ தெரிவித்திருக்கிறது.

No comments:

Post a Comment