கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க சமூக ஆர்வலர்களின் கோரிக்கைதான் என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 11, 2020

கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க சமூக ஆர்வலர்களின் கோரிக்கைதான் என்ன?

கொரோனாவைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மத்திய சுகாதாரத்துறை மூலம் மொபைல் போன்களில் காலர் டியூன்கள் மத்திய அரசின் ஏற்பாட்டில் தானாகவே செட்டிங் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த காலர் டியூன்கள் 80 சதவீத மக்களுக்கு புரியவில்லை என புலம்புகின்றனர். சீனாவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சீனர்கள் உயிரிழந்துள்ளனர்.



 லட்சணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பாதிப்பால், சீனாவில் படித்துவந்த, வேலைபார்த்து வந்த வெளிநாட்டவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்றி வருகிறது.

இந்த நிலையில் சீனாவை தாண்டி ஈரான் நாட்டிலும் கொரோனா வைரஸ் தாக்குதலால் 17க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுதவிர இந்தியா, சிங்கப்பூர், ஈரான் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர்

. கொரோனா வைரஸ் தாக்குதலால் கத்தார் நாட்டிற்கு இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு அந்த நாடு தடைவிதித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இதுவரை அதிகாரப்பூர்வமான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதன் பாதிப்பு விரிவடைந்து கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமே அதளபாதாளத்திற்கு சென்று கொண்டுள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதைப்போலவே தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையும் தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.



 மொபைல் போன் பயன்படுத்துபவர்கள், தங்களை அழைப்பவர்களை மகிழ்விப்பதற்காக காலர் டியூனை பயன்படுத்துவது வழக்கம். கட்டண அடிப்படையில் மொபைல் போன் உரிமையாளர் தனக்கு பிடித்தமான பாடல், வசனம், தனது பெயர் போன்று தனக்கு பிடித்ததை செட் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நோக்கில், அந்த வைரஸ் எப்படி பரவும், வைரஸ் பரவாமல் இருக்க என்ன செய்வது என்பது போன்று ஒரு ஆடியோ பதிவை செய்து, அனைவரின் மொபைல் போன் காலர் டியூனாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஒப்புதலுடன் செய்துள்ளது.


நாம் நமது போனில் இருந்து அடுத்தவரின் மொபைல் போனுக்கு தொடர்பு கொண்டால், நாம் கால் செய்தவரின் மொபைல் போனில் ரிங் டோன் வருவதற்கு பதிலாக லொக்... லொக்... என ஒருவர் இருமும் சப்தத்துடன், ஆங்கிலத்தில் ஒரு பேசும் பதிவு செய்யப்பட்ட விழிப்புணர்வு வசனம் இடம் பெறுகிறது.

புதிதாக போன் செய்பவர்கள் இந்த இருமல் சத்தத்தை கேட்டு முதலில் அதிர்ச்சி அடையும் வகையில் இந்த காலர் டியூன் செட்டிங் செய்யப்பட்டுள்ளது. இந்த காலர் டியூனில் பேசுபவர் ஆங்கிலத்தில் பேசுவதால், சுமார் 80 சதவீத அடித்தட்டு மக்களுக்கு அவர் என்ன பேசுகிறார் என்பதே புரியவில்லை.


 படித்தவர்களுக்கு கூட இரண்டு, 3 முறை அதை கேட்டால்தான் புரிகிறது. தற்போது தமிழகத்தில் மொபைல் போன் இல்லாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளதால், கிராமப்புற, வயதான, படிக்காத மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், தமிழில் பேசும்படியான காலர் டியூனை செட் செய்தால் அனைத்து மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நன்றாக சோப்பு (கிருமி நாசினி)போட்டு கைகழுவுதல் அவசியம் எனவும், இருமுபவர்களிடம் இருந்து குறிப்பிட்ட துhரத்திற்கு தள்ளி நிற்க வேண்டும் எனவும் ஆங்கிலத்தில் பேசுவதை தமிழில் பேசினால், தமிழக மக்கள் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்.

இதுகுறித்து நமது நண்பர்கள் சமூக அமைப்பின் நெவளிநாதன் கூறியது: கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.



 அதன் ஒருபகுதியாக கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் எளிய வழிமுறைகளை மத்திய அரசு இந்தியாவில் உள்ள அனைத்து மொபைல் போன்களின் காலர் டியூனாக செட் செய்துள்ளது. இதுவரை காலர் டியூன் பயன்படுத்தாதவர்களின் மொபைல் போன்களுக்கு கூட காலர் டியூன் செட் செய்யப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை கொரோனாநோய் பரவாமல் தடுக்க மத்திய அரசு காட்டும் வேகத்தை காட்டுகிறது. மிகவும் எளிய முறையில் நம்மை கொரோனாவைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள காலர் டியூனில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை செய்தாலே போதும்.

ஆனால் இந்த காலர் டியூன் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளதால், கிராமப்புற மக்கள், படிக்காதவர்கள், பெரும்பாலான பெண்களுக்கு புரியவில்லை. பள்ளி, கல்லூரி செல்லும் குழந்தைகளை பள்ளி, கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்ததும், சுத்தமாக கைகளை கழுவச் சொல்பவர் அம்மாதான்.


 அம்மாவிற்கு கொரோனா வைரஸ் குறித்த புரிதல் இருந்தால் அந்த குடும்பத்திற்கே ஏன் அந்த கிராமத்திற்கே கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்க முடியும்.

ஆனால் காலர் டியூன் ஆங்கிலத்தில் உள்ள மொபைல் போனை பயன்படுத்தும் சுமார் 80 சதவீதம் பேருக்கு காலர் டியூனில் குறிப்பிடும் தகவல் புரியவில்லை. இதனால் காலர் டியூன் வெளியிட்டதன் நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை.


 எனவே மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநில மக்கள் பேசும் மொழியிலேயே காலர் டியூன்களை செட் செய்தால், மக்களுக்கு பயன் உள்ளதாக அமையும். அவ்வாறு காலர் டியூனில் குறிப்பிடும் விளக்கத்தை மக்கள் அறிந்து கொண்டால் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முடியும். தமிழகத்தில் தமிழ் மொழியில் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு வாசகங்களை செட் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


எனவே மத்திய அரசு காலர் டியூன்களில் அந்தந்த மாநில மொழியில் பேசும் வகையில், குறிப்பாக தமிழகத்தில் தமிழில் மக்களுக்கு புரியும் படி காலர் டியூன்களை செட் செய்தால், பயனுள்ளதாக அமைவதோடு, கொரோனாவைரஸ் பரவாமல் தடுக்கவும் முடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்

No comments:

Post a Comment