கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு மூலம், சர்வதேச கவனத்தை தமிழ்நாடு போலீஸ் ஈர்த்துள்ளது. இதனை பல்வேறு செய்தி நிறுவனங்களும் பாராட்டி உள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் இன்று உலகம் முழுவதும் ெபரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும்நிலையில், ஒவ்வொரு நாடும் தங்களது மக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் மூலம் பிரசாரம் ேமற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் பாபு, கொரோனா விழிப்புணர்வு தகவலை சொல்வதை விட, வித்தியாசமாக கொரோனா வடிவிலான ஹெல்மெட்டை அணிந்து பொது இடங்களில் வலம்வருகிறார்.
வில்லிவாக்கம் பகுதியில், இளைஞர்கள் சாலைகளில் சுற்றித்திரிவது, காய்கறி சந்தையில் சமூக விலகலை மக்கள் பின்பற்றாமல் இருப்பதை கண்டபின்னர், இவ்வாறு விழிப்புணர்வு செய்து வருகிறார்.
தமிழ்நாடு போலீசின் கொரோனா ஹெல்மெட் விழிப்புணர்வு, சமூக வலைதளங்களிலும், பத்திரிகை, செய்தி ஊடங்களிலும் வெளியானதை தொடர்ந்து, சர்வதேச ஊடங்களும் தமிழ்நாடு போலீசின் கொரோனா விழிப்புணர்வை பாராட்டி வருகின்றன.
இதுதொடர்பாக, நியூயார்க் டைம்ஸ், தி வீக், சிஎன்என் ேபான்ற சர்வதேச செய்தி நிறுவனங்களும், கொரோனா ஹெல்மெட் மற்றும் போலீசாரின் விழிப்புணர்வு குறித்து செய்திகள் வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து, இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு கூறுைகயில், ‘முதியவர்களை கொரோனா அதிகம் தாக்குகிறது என்கிறார்கள். மார்க்கெட் பகுதியில் முதியவர்கள் பலரிடம் கொரோனா பற்றி தெரியுமா? என்பது தெரியவில்லை.
சந்தையில் ஆட்கள் கூட்டமாக நிற்கக்கூடாது என்று கூறியபோது சிலருக்கு புரியவில்லை. அதேபோல சாலையில் செல்லும் இளைஞர்களுக்கு அறிவுரை சொன்னால் அவர்கள் முக்கியத்துவம் அளிப்பது குறைவு. அவர்கள் கவனத்தை நம்மிடம் திருப்பும் வழியில் விழிப்புணர்வு செய்யவேண்டும் என்பதற்காக இந்த ஹெல்மெட்டை வடிவமைத்தோம்’ ‘என்கிறார்.
வித்தியாசமான கொரோனா ஹெல்மெட்டை தயாரித்த ஆர்ட் கிங்டம் அமைப்பின் நிறுவனர் பி.கவுதம் கூறுகையில், ‘மக்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லை. வெளியே வரக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது.
ஆனால், சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல், முகமூடிகள் இல்லாமல் மக்கள் அங்கும் இங்கும் சுற்றித் திரிவதை நாங்கள் காண்கிறோம். கண்ணுக்குத் தெரியாத நோய் தொற்று என்பதால், மக்கள் இந்த நோயை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. விழிப்புணர்வுக்காக கொரோனா ஹெல்மெட் தயாரித்தோம்’ என்றார்

No comments:
Post a Comment