ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 14, 2020

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் எவ்வளவு வரி செலுத்துகிறோம் தெரியுமா?


ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை 17.79 ரூபாய் மட்டுமே. ஆனால் அதிலிருந்து நான்கு மடங்கு அதிகமாக நாம் பெட்ரோல், டீசலை விலை கொடுத்து வாங்க, அதன்மீது விதிக்கப்படும் வரிகளே காரணம். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு நாம் எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பதை பார்க்கலாம்.


மார்ச் 1-ம் தேதி நிலவரப்படி, கச்சா எண்ணெய்யின் விலை =ரூ.17.79 (1 லிட்டர்). நுழைவுக் கட்டணம், சுத்திகரிப்பு, தரையிறக்கும் செலவு = ரூ.13.91. மத்திய அரசின் கலால் வரி மற்றும் சாலை வரி = ரூ.19.98. பெட்ரோல் பம்ப் டீலர்களுக்கான கமிசன் = ரூ.3.55. மதிப்புக் கூட்டு வரி= ரூ.14.91.


இறுதி செய்யப்பட்ட 1 லிட்டர் பெட்ரோலின் சில்லறை விற்பனை விலை = ரூ.70.14. இவ்வாறு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மட்டும் 52.35 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது.

2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 101.14 டாலர்களாக இருந்தது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான மத்திய அரசின் கலால் வரி ரூபாய் 9.48 ஆக இருந்தது. மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின், படிப்படியாக கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும் பெட்ரோல் விலை குறையவில்லை.மாறாக கலால் வரி தொடர்ந்து உயர்த்தப்பட்டது.


தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 22.98 ரூபாய் கலால் வரி விதிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் 13.5 ரூபாய் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தகவல்:news 18 தமிழ்

No comments:

Post a Comment