மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 13, 2020

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பணவீக்கத்தால் விலை வாசி உயர்வு, செலவுகள் அதிகரிக்கும் போது, அதை சமாளிக்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது.



 விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படும்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் இறுதி செய்யப்படும் விலைவாசி குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படி உயர்வு நிர்ணயிக்கப்படுகிறது.


 அந்த வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்திலிருந்து மேலும் 5 சதவீதம் அதிகரித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 9ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.இதுவரை மத்திய அரசு வழங்கிய அகவிலைப்படி உயர்வில் இதுதான் அதிகம்.



இதனால், அரசுக்கு கூடுதலாக ரூ.16,000 கோடி செலவாகும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும்.


இதனால் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் என ஒரு கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment