பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 14, 2020

பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ்


பிரிட்டனில் பிறந்த குழந்தைக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது - உலகில் மிக இளம் வயதில் பாதிக்கப்பட்டவர் என்ற இடத்தைப் பெறுகிறது இந்தக் குழந்தை.


முன்னதாக இந்தக் குழந்தையின் தாய்க்கு நிமோனியா காய்ச்சல் என்று கருதப்பட்டு லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தாயும் குழந்தையும் வெவ்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏற்கெனவே வடக்கு மிடில்செக்ஸ் மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டபோதிலும் தாய்க்கு கரோனா பாதிப்பு இருப்பது குழந்தைப் பிறப்புக்குப் பிறகுதான் தெரிய வந்தது.

குழந்தை பிறந்தவுடனேயே கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.


பிறந்தவுடன் வைரஸ் தொற்றியதா, கருவிலேயே தொற்றியதா என்பதை அறிய மருத்துவக் குழுவினர் முயன்று வருகின்றனர்.

பிரிட்டனில் இதுவரை கரோனா நோய்த் தொற்றால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 798 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

SOURCE: DINAMANI WEBSITE

No comments:

Post a Comment