தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 16, 2020

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் வேலை


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் காலியாக உள்ள உதவி பொறியாளர், சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 26 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Assistant Engineer
காலியிடங்கள்: 78
சம்பளம்: மாதம் ரூ. 78 37,700 - 1,19,500


பணி: Environmental Scientist
காலியிடங்கள்: 70
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500

பணி: Assistant (Junior Assistant)
காலியிடங்கள்: 38
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

பணி: Typist
காலியிடங்கள்: 56
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், வேதியியல், சுற்றுச்சூழல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்தவர்கள், வேதியியல், உயிரியியல், விலங்கியல், சுற்றுச்சூழல் அறிவியல், சுற்றுச்சூழல் டெக்னாலஜி, மைக்ரோபயோலஜி, பயோகெமிஸ்ட்ரி, தாவரவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் எம்.எஸ்சி முடித்தவர்கள்,

 ஏதாவதொரு பிரிவில் இளங்கலை பட்டத்துடன் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் தொடர்பான 6 மாத படிப்பை முடித்தவர்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு பிரிவில் முதுகலை சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்

வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி, விதைகள் பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpcb.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2020

Click here to download pdf

No comments:

Post a Comment