பள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி வைப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 14, 2020

பள்ளி மாணவர்களுக்கு லீவு இல்லை; நேற்றைய அறிவிப்பு நிறுத்தி வைப்பு


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.



அதன் எதிரொலியாக தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக நேற்று அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.


அத்துடன் கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது



.இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.அதன்படி, தமிழகத்தில் கொரோனா எதிரொலியால் அறிவிக்கப்பட்ட எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கான விடுமுறைகள் நிறுத்தப்பட்டுள்ளன


. மேலும், கேரளாவை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, தேனி, நெல்லை, தென்காசி, கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 5-ஆம் வகுப்பு வரை அறிவிக்கப்பட்ட விடுமுறைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment