என்னை பார்க்க யாரும் வரவேண்டாம் :அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 18, 2020

என்னை பார்க்க யாரும் வரவேண்டாம் :அமைச்சர் செங்கோட்டையன்


கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.


இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.‌ இந்நிலையில் தன்னை பார்க்க யாரும் வரவேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.


 கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள தனது வீட்டின் முகப்பில் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளார்.

அதில், வரும் மார்ச் 31ஆம் தேதி வரை தன்னை வீட்டிலோ அல்லது சென்னையிலோ சந்திக்க வரவேண்டாம் என எழுதப்பட்டுள்ளது.

இதனால் அமைச்சரை சந்திக்க வருபவர்கள் தோட்டத்து வீட்டின் முகப்பு வாசலுடன் திரும்பிச் செல்கின்றனர்.

No comments:

Post a Comment