அரசு ஊழியர்களுக்கு முன்ஊதிய உயர்வு ரத்து: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, March 11, 2020

அரசு ஊழியர்களுக்கு முன்ஊதிய உயர்வு ரத்து: தமிழக அரசு அதிரடி நடவடிக்கை

அரசு ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.


தமிழக அரசு ஊழியர்கள், ஒரு துறையில் பணியாற்றும்போது அந்த துறைக்கு தேவையான கல்வி தகுதியை விட கூடுதல் கல்வி தகுதி இருந்தால் இரண்டு முதல் மூன்று முன் ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டு வந்தது. இதன்மூலம், சிலர் அரசு துறையில் பணியில் சேர்ந்த பிறகு கூட உயர் படிப்புகளை படித்து கூடுதல் சம்பள உயர்வை பெற்று வந்தனர்.



 இந்நிலையில், தமிழக அரசு இதுவரை வழங்கிய வந்த கூடுதல் முன் ஊதிய உயர்வை ரத்து செய்வதாக நேற்று அதிரடியாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழக அரசில் அனைத்து துறைகளிலும் அரசு ஊழியர்கள் உயர் கல்வி கற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த முன் ஊதிய உயர்வு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது” என்று கூறியுள்ளார்.



இதன்மூலம் அரசு பணியில் உள்ளவர்கள் கூடுதல் படிப்பை காரணம் காட்டி இனி கூடுதல் சம்பளம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

1 comment: