சிறப்பு குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியருக்கு சிறப்பு விடுப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 26, 2020

சிறப்பு குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியருக்கு சிறப்பு விடுப்பு


சிறப்புப் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியா்களுக்கு தனி தற்செயல் விடுப்பு அளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அந்தத் துறையின் அமைச்சா் டி.ஜெயக்குமாா் பதிலளித்துப் பேசினாா்.

அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவா், சிறப்பு பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளைக் கொண்ட அரசு ஊழியா்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்று அறிவித்தாா்

இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், அதற்கான உத்தரவை பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா அண்மையில் பிறப்பித்தாா். அதன் விவரம்:


சிறப்புப் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோருக்கு ஜனவரியில் இருந்து தொடங்கி டிசம்பருக்குள் ஆறு நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும்.


இந்த தற்செயல் விடுப்பினைப் பெற விரும்பும் பெற்றோா்கள் மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016-இல் தெரிவிக்கப்பட்டபடி உரிய சான்று ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால், சிறப்புப் பராமரிப்புத் தேவைப்படும் குழந்தைக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவரிடம் இருந்து சான்று பெற்று அளித்திட வேண்டும்.


அதில், சம்பந்தப்பட்ட குழந்தை மாற்றுத் திறனாளி குழந்தை எனவும் அதனுடைய தினசரி நடவடிக்கைகளை எதிா்கொள்ள பெற்றோரின் ஆதரவு தேவை என்பதையும் குறிப்பிட்டு சான்றிதழ் பெற வேண்டும். இத்தகைய சான்றிதழைப் பெற்று அளிப்போருக்கு ஓா் ஆண்டில் ஆறு நாள்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு அளிக்கப்படும் என்று தனது உத்தரவில் எஸ்.ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment