கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, இலவச, 'அட்மிஷன்' வழங்கும் முன், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முடிந்துள்ளதால், பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை, 25 சதவீத இடங்களை, இலவச மாணவர் சேர்க்கை திட்டத்துக்கு வழங்க வேண்டும்.

நன்கொடை
இந்த, 25 சதவீத இடங்களுக்கான கல்வி கட்டணத்தை, தனியார் பள்ளிகளுக்கு, தமிழக அரசு வழங்கும். இந்த திட்டம், எட்டு ஆண்டுகளாக அமலில் உள்ளது. ஆனால், இந்த திட்டத்தால், ஏழை பெற்றோருக்கு, எந்த பலனும் கிடைக்கவில்லை என்று, தொடர்ந்து புகார்கள் வருகின்றன.
அதாவது, ஒவ்வொரு பள்ளியும், கல்வி ஆண்டு துவங்கும் முன்பே, மாணவர் சேர்க்கையை முடித்து விடுகின்றன. ஆனால், இலவச திட்டத்தில், கல்வி ஆண்டின் துவக்கத்தில் தான், அரசின் சார்பில் மாணவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதன் காரணமாக, அரசின் இலவச திட்டம் வரும் முன்பே, மாணவர்கள், தாங்கள் விரும்பும் பள்ளிகளில், அதிக கட்டணம் மற்றும் நன்கொடை செலுத்தி, பள்ளிகளில் சேர்ந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பெற்றோர்கள் கூறியதாவது:இலவச மாணவர் சேர்க்கை திட்டத்தில், எங்கள் பிள்ளைகளை சேர்க்கலாம் என்றால், அதற்கான மாணவர் சேர்க்கையை, அரசு மிகவும் தாமதமாகவே மேற்கொள்கிறது. அதற்கு முன், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து விடுகிறது.

அரசின் இலவச திட்டத்தில், இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற, அச்சம் ஏற்படுவதால், பல பெற்றோர், தாங்கள் விரும்பும் பள்ளிகளில், அதிக கட்டணமும், நன்கொடையும் கொடுத்து, மாணவர்களை சேர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதனால், மாணவர்களை சேர்க்கும் போதே, ஆயிரக்கணக்கில் கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
வரிப்பணம்
இதை, பள்ளி கல்வி அமைச்சரோ, மெட்ரிக்குலேஷன் இயக்குனரோ கண்டுகொள்வதில்லை. அவர்கள் நடவடிக்கை எடுக்காததால், தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக, இலவச மாணவர் சேர்க்கையை, வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக சந்தேகிக்கிறோம்.
இந்த திட்டத்தின்படி ஒதுக்கப்பட வேண்டிய, இலவச சேர்க்கை இடங்களை, இப்பள்ளிகள், அரசின் உதவியுடன் நிரப்பி, அதற்கான கட்டணத்தை, அரசிடம் இருந்தே பெறும் நிலை உள்ளது.இந்த நடைமுறையை மாற்றாவிட்டால், இலவச மாணவர் சேர்க்கை திட்டம், மக்களின் வரிப் பணத்தை வீணாக்கும் திட்டமாகவே பார்க்கப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்

No comments:
Post a Comment