காலாவதியான டிரைவிங் லைசன்ஸ் : மத்திய அரசு முக்கிய அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 31, 2020

காலாவதியான டிரைவிங் லைசன்ஸ் : மத்திய அரசு முக்கிய அறிவிப்பு


பிப்.,01ம் தேதிக்கு பின்னர் காலாவதியான டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்களை புதுப்பிக்க ஜூன்.30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது



.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனையடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டன. அரசு போக்குவரத்து அலுவலகங்களும் மூடப்பட்டதால், மோட்டார் வாகனங்களின் ஆவணங்களை புதுப்பிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.


டிரைவிங் லைசன்ஸ், வாகனங்களின் இன்சூரன்ஸ், பிட்னஸ் சான்றிதழ், பெர்மிட்கள் உள்ளிட்ட மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் ஜூன் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



.இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட வாகன ஆவணங்கள் பிப்.,01ம் தேதிக்கு பின்னர் காலாவதியாகி இருந்தால், போலீசாரும் போக்குவரத்துத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் .

அந்த ஆவணங்கள் ஜூன் 30ம் தேதி வரை ஏற்புடையதாக கருத வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment