இலவச நீட் பயிற்சி எப்போது? கல்வித்துறை வெளியிட்ட புதிய தகவல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 12, 2020

இலவச நீட் பயிற்சி எப்போது? கல்வித்துறை வெளியிட்ட புதிய தகவல்

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவா்களுக்கு தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கவுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிமாணவா்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயா்கல்வி படிப்புகளுக்கான போட்டித் தேர்வுகளுக்கு 2017-ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.


மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை கல்வித் துறை அளித்து வருகிறது. நிகழ் கல்வியாண்டுக்கான நீட் பயிற்சி கடந்த ஆண்டு செப்.24-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த வகுப்புகள் பிளஸ் 2 பொதுத்தேர்வையொட்டி கடந்த ஜன.20-ஆம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்த வகுப்புகள் சில நாள்களில் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

 மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு வரும் மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, கடந்த ஆண்டு தமிழக அரசின் சாா்பில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.

 இந்தநிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வுக்குப் பிறகு 'இ-பாக்ஸ்' நிறுவனம் சாா்பில் இணைய வழியாக பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சோதனை முன்னோட்டம் மாா்ச் 17-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களும் தங்கள் மாவட்டங்களில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையங்களில் சோதனை முன்னோட்டம் நடத்துவதற்கு இணைப்பு வசதிகளை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

 இதையடுத்து முன்னோட்டத்தின் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment