தமிழக அரசிற்கு உட்பட்ட நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கால்நடை பராமரிப்புத் துறை, நாமக்கல்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகுதிகள்:
தமிழில் நன்கு எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். அருந்ததியினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 35 வயது வரையில் இருக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்) 32 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : நிலை 8-ன்படி, மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட கால்நடை பராமரிப்புத் துறையில் ஓட்டுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல அலுவலகத்திலோ, அல்லது namakkal.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ விண்ணப்பம் பெற்று, அதனைப் பூர்த்தி செய்து மார்ச் 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:
மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, 5/234, ஆசிரியர் காலனி, மோகனூர் ரோடு, நாமக்கல் - 637 001.
Click here to download PDF
No comments:
Post a Comment