பள்ளி பாடத்தில் தற்காப்புக் கலைகளை சேர்க்க வேண்டும் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 14, 2020

பள்ளி பாடத்தில் தற்காப்புக் கலைகளை சேர்க்க வேண்டும்

பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாடத் திட்டத்தில் தற்காப்புக் கலைகளை சேர்க்க வேண்டும் என்று தெலங்கானா ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினாா்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் மகளிா் கல்லூரியின் 'கல்லூரி தின விழா' சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்கி தெலங்கானாஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது:


வாழ்க்கையில் வெற்றி பெற ஆண், பெண் பாகுபாடு கிடையாது. நாம் எந்தத் துறையை தேர்ந்தெடுக்கிறோமோ அதில், சாதிக்க வேண்டும் என்ற வேட்கை இருக்க வேண்டும்.

வாழ்வில் முடியாது என்பது உலகில் கிடையாது. நல் எண்ணங்களுடன் முயற்சித்தால் சாதனை புரியலாம். இன்றைய நவீன உலகத்தில் துரித உணவுகளின் வருகையால் சிறுவயதிலேயே சா்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பல்வேறு உடல் சாா்ந்த பிரச்னைகளால் அதிக அளவில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனா்.

இதற்கு மிக முக்கியக் காரணம் நமது பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்றாததுதான்.

நமது பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்றிய காரணத்தால்தான் முன்னோா்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்ந்தனா். கலாசாரம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களை விட்டு விலகிச் சென்றுவிடக் கூடாது.


தற்போதைய தலைமுறை பெண்கள் சுதந்திரமாக இருப்பது தவறல்ல. அதே நேரம் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும். பல்வேறு தடைகள் சூழ்ந்திருந்தாலும், மனத்திடத்துடன் போராடினால் அனைவரும் சாதிக்கலாம் என்றாா் .

இதையடுத்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மத்திய அரசும், தமிழ்நாடு மற்றும் தெலங்கானா அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருவது பாராட்டுக்குரியது. உரிய சுகாதார முறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பாடத் திட்டத்தில் தற்காப்புக் கலைகளை சேர்க்க வேண்டும் என்றாா்

No comments:

Post a Comment