தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணிக்கான, 'டிப்ளமா' தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தொடக்க கல்வி ஆசிரியர் பணிக்கான டிப்ளமா தேர்வு, ஜூன், 3ல் துவங்கி, 22ல் முடிகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனி தேர்வர்கள், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அதில் தரப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சான்றிதழ்களை இணைத்து, தங்கள் மாவட்டத்துக்கு அருகில் உள்ள, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வழியாக சமர்ப்பிக்க வேண்டும்.மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில், புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
அங்கேயே, புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து, தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பங்களை, மார்ச், 30 முதல், ஏப்., 4 வரை சமர்ப்பிக்கலாம்.
தபால் வழியில் விண்ணப்பங்கள் பெறப்படாது. தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, ரத்து செய்யப்படும்.ஒவ்வொரு பாடத்துக்கும், தேர்வு கட்டணமாக,
50 ரூபாய்; மதிப்பெண் சான்றிதழுக்கு முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கு, தலா, 100 ரூபாய்; பதிவு, சேவை கட்டணம், 15 ரூபாய் மற்றும் 'ஆன்லைன்' பதிவு கட்டணம், 50 ரூபாய் என, கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment