கோவை:மேல்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கண்காணிப்பு பணியில், பட்டதாரி ஆசிரியர்களை ஈடுபடுத்தி இருப்பதால், பத்தாம் வகுப்பு மாணவர்களை வழிநடத்துவதில், சிக்கல் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகம் முழுக்க, பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது. வரும் 26ம் தேதியுடன் நிறைவடைகிறது.
மொத்தம் 116 மையங்களில், மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.அறை கண்காணிப்பு பணியில், பத்தாம் வகுப்பு கையாளும் பட்டதாரி ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டாமென, ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டது.இருப்பினும், நகர் மற்றும் பேரூர் கல்வி மாவட்டங்களில், 150க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தேர்வுப்பணி ஒதுக்கப்பட்டது
. இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து சமீபத்தில் நடந்த, தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் சரவணக்குமார் கூறுகையில், ''ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக, சங்க நிர்வாகிகளுக்கு, 130 கி.மீ., துாரம் வரை, பணிமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
ஓராண்டுக்கும் மேலாக, ஆசிரியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதோடு, வரும் 27ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. முக்கிய பாடங்கள் கையாளும் பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வு கண்காணிப்பு பணியில் இருப்பதால், கல்வியில் பின்தங்கிய மாணவர்களை, வழிநடத்த இயலாத நிலை நீடிக்கிறது.
இதற்கு உரிய ஆவண செய்ய, அதிகாரிகள் முன்வர வேண்டும்,'' என்றார்.வரும் 27ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்குகிறது. முக்கிய பாடங்கள் கையாளும் பட்டதாரி ஆசிரியர்கள், தேர்வு கண்காணிப்பு பணியில் இருப்பதால், கல்வியில் பின்தங்கிய மாணவர்களை, வழிநடத்த இயலாத நிலை நீடிக்கிறது.
No comments:
Post a Comment