தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, March 14, 2020

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய பிரதமர் மோடி


தமிழகத்திலிருந்து, ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான வேட்பாளர் பட்டியலை, தி,மு,க., மற்றும் அ.தி.மு.க., கட்சிகள் வெளியிட்டு, வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டன.


இதில், அ.தி.மு.க., தரப்பில், த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசனுக்கு ராஜ்ய சபா, 'சீட்' கொடுத்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

விஜய்காந்தின் தே.மு.தி.க., தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என, தொடர்ந்து கேட்ட போதும், வாசனுக்கு தரப்பட்டதற்கு, சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.

வாசன் டில்லி அரசியலுக்கு வர வேண்டும் என, பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விரும்பினர். இந்த வேண்டுகோள், ஒரு முக்கிய தலைவர் மூலமாக, தமிழக முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் துணை முதல்வர், பன்னீர் செல்வத்துக்கு தெரிவிக்கப்பட்டது.



வாசனின் பெயர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அ.தி.முக., தலைவர்களுக்கு, பிரதமர் தரப்பிலிருந்து நன்றி தெரிவிக்கப்பட்டது.விரைவில், மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ள நிலையில், வாசன், ராஜ்யசபா, எம்.பி.,யாவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவல்: தினமலர்

No comments:

Post a Comment