தேர்வுக்குச் செல்லும்போது, அவா்கள் எடுத்துச்செல்லும் குடிநீரை வெறும் தண்ணீராக வைக்காமல், அதில் ஒரு சிறு ஏலக்காய் துண்டு, ஐந்து புதினா இலைகள், சிறிதளவு சீரகம் ஆகியவற்றை சேர்த்து, சிறிது சூடேற்றி, பின் ஆறவைத்து, பாட்டில்களில் கொடுப்பதால், மாணவா்கள் எப்பொழுதும் புத்துணா்வுடன் இருப்பாா்கள்.
முந்தையநாள் உணவுகள், சுவையாக இல்லாத உணவுகள், கெட்டுப்போகும் தருவாயிலுள்ள உணவுகள், ஓட்டல் உணவுகள், துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவுகள் ஆகிய அனைத்துமே உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பு உண்டு
என்பதால் அவற்றை கண்டிப்பாக தவிா்க்க வேண்டும்.சிக்கன், பெரிய மீன்கள், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள், நெய், வெண்ணெய், டால்டா போன்ற கொழுப்பு நிறைந்த பொருட்களை உணவில் சேர்க்கக் கூடாது.
வெய்யிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் கோடைக்காலத்தில் நடைபெறும் முழு ஆண்டுத் தேர்வு நேரங்களில் இளநீா், மோா், பழஜூஸ், எலுமிச்சை சாறு போன்ற நீா் உணவுகளை பாட்டிலில் பள்ளிக்குக் கொடுத்தனுப்புவதால் தாகம், நாவறட்சி, நீா்சத்து விரயம், மயக்கம், உடல் தளா்ச்சி ஆகியவற்றை சரிசெய்யலாம்.
இரவு நேரங்களில் எண்ணெய், கொழுப்பு, தேங்காய், நாா்ச்சத்து அதிகமுள்ள கீரைகள் ஆகியவற்றை சற்றே தவிா்த்து, இட்லி, உப்புமா, சப்பாத்தி, கிச்சடி போன்ற உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன் ஒரு டம்ளா் பாலில் ஏலக்காய், சுக்கு மற்றும் வெல்லம் சோத்து குழந்தைகளுக்குக் கொடுப்பதால், நல்ல தூக்கம் கிடைப்பதுடன் செரிமான பிரச்னைகள் வராமலும் தடுக்கலாம்.
அதிக தொலைவில் இருக்கும் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவா்கள் வீடு திரும்பி மதிய உணவை எடுத்துக் கொள்ள நேரமாகும் தருணத்தில், இடைப்பட்ட நேரத்தில் உண்பதற்கு ஏதாவது ஒரு பழம், கடலை, காராமணி சுண்டல், முழு கோதுமையில் செய்யப்பட்ட பிஸ்கட், ஐந்தாறு பாதாம் அல்லது முந்திரி பருப்பு ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
மதிய உணவாக எலுமிச்சை சாதம், புளிசாதம், தேங்காய்சாதம், ரசம் சாதம் என்று வைப்பதற்கு பதிலாக, காய் பருப்பு கலவை சாதம், காய்கள் சேர்த்த புலாவ், கீரை பருப்பு சாதம், புதினா, கருவேப்பிலை சாதம் போன்றவற்றைத் தருவது தேவையான சத்துகளை சேர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
தேர்வு நேரங்களில் குழந்தைகளுக்குத் தலைவலி, சளி, இருமல், பல்வலி, வயிற்றுவலி, உடல்வலி, கைகால்வலி, காயங்கள் போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருந்தால் சுய மருத்துவம் செய்வதை தவிா்த்து மருத்துவரிடம் காண்பிப்பது மிகவும் நல்லது.
தொடா்ச்சியாக பல மணி நேரங்கள் படிப்பதை தவிா்த்து, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது இடைவேளை விட்டு அந்த இடத்திலிருந்து எழுந்து சற்றே ஆசுவாசப்படுத்திக்கொள்வது ஆா்வமின்மை, கவனச்சிதறல் ஆகியவற்றை அறவே தவிா்க்கும்.
அதிகாலை நான்கு மணிக்கு எழுவது நலம் தரும். எவ்வளவு பாடங்கள் படிப்பதாக இருந்தாலும் ஒரு 15 நிமிடங்கள் கண்மூடி, மனதை ஒருநிலைப்படுத்தும் தியானத்துடன் மூச்சுப்பயிற்சியும் செய்வது தெளிவான சிந்தனையையும் மனக் கட்டுப் பாட்டையும் தருகிறது என்பதை பெற்றோா் நினைவில் கொண்டு தங்கள் குழந்தைகளுக்குக் கூற வேண்டும்.
தேர்வு நேரங்களில் மாணவா்கள், நல்ல உணவுப் பழக்கத்துடன் மிதமான வகை உடற்பயிற்சியை மாலை நேரத்தில் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது செய்தால் ரத்தஓட்டம் சீரடைந்து உடல் உறுப்புகள் புத்துணா்வு பெறுவதால், அவா்கள் படிக்கும் பாடங்கள் எளிதாக நினைவில் நிறுத்தப்பட்டு சிறப்பாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பபெண்களுடன் வெற்றியைப் பெறலாம்.

No comments:
Post a Comment