பி.எப்., விதிமுறை திருத்தம் அமலுக்கு வந்தது உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, March 30, 2020

பி.எப்., விதிமுறை திருத்தம் அமலுக்கு வந்தது உத்தரவு

பி.எப்., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில், தொழிலாளர்கள், அதிகபட்சமாக மூன்று மாத அடிப்படை ஊதியத்தை பெறுவதற்கு வகை செய்வதற்கான அரசாணையை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் நேற்று வெளியிட்டது. 



கடந்த வாரம், மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், கொரோனா பாதிப்பு தொடர்பாக, 1.70 லட்சம் கோடி ரூபாய் நிவாரண உதவி திட்டங்களை அறிவித்தார். அவற்றில், 'ஒரு தொழிலாளர் தன் பி.எப்., கணக்கில் செலுத்தியுள்ள தொகையில், 75 சதவீதம் வரை அல்லது மூன்று மாத அடிப்படை சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம்.




 அத்தொகையை திரும்ப செலுத்தத் தேவையில்லை' என்ற அறிவிப்பும் ஒன்று.
இதற்காக, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், 1952ம் ஆண்டின், தொழிலாளர் வருங்கால நிதி திட்ட விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது. புதிய விதிமுறை, மார்ச், 28 முதல் அமலுக்கு வந்துள்ளதாக, தொழிலாளர் நல அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment