ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்- ரயில்வே துறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 29, 2020

ரத்தான ரயில் டிக்கெட் கட்டணம் முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும்- ரயில்வே துறை

மார்ச் 21 முதல் ஏப்ரல் 14 வரையுள்ள நாட்களில் ரயிலில் பயணம் செய்யப் பயணச்சீட்டு எடுத்தவர்களுக்கு முழுத் தொகையும் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

ரயில்வே முன்பதிவு மையத்தில் எடுத்த பயணச்சீட்டுகளை மார்ச் 27ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால், டிக்கட் டெபாசிட் ரசீது படிவத்தை நிரப்பிக் கோட்டத் தலைமை வணிக மேலாளர், மண்டலத் தலைமை அதிகாரிக்கு ஜூன் 21ஆம் தேதி வரை கொடுத்து மீதித் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

மார்ச் 27ஆம் தேதிக்குப் பிறகு ரத்து செய்யப்படும் அனைத்துப் பயணச்சீட்டுகளுக்கும் முழுத் தொகையும் திருப்பிக் கொடுக்கப்படும்.

ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் முன்பதிவு செய்த பயணச்சீட்டுகள் மார்ச் 27 ஆம் தேதிக்கு முன் ரத்து செய்திருந்தால் மீதித் தொகை, அவரவரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மார்ச் 27ஆம் தேதிக்குப் பின் ரத்து செய்யப்படும் பயணச்சீட்டுகளுக்கு முழுத் தொகையும் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.


இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வழியாக, முன்பதிவு செய்த பயணியருக்கு, வழக்கமான பரிவர்த்தனை வழியாக, முழு டிக்கெட் கட்டணமும், அவர்களின் வங்கி கணக்கிற்கு சென்று விடும்.

ரயில் நிலையங்களில் முன்பதிவு செய்தவர்கள், 'கவுன்டர்'கள் மூடப்பட்டுள்ளதால், நேரில் செல்ல வேண்டாம். ஏப்., 15ல் இருந்து, கவுன்டர்களில் கட்டணத்தை திரும்ப பெறலாம்.

No comments:

Post a Comment