மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் .....? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 13, 2020

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் .....? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனே கைது செய்ய வேண்டும் னென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



சாலை விபத்தில் கூடுதல் இழப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார். தற்போதுவரை மதுகுடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்த மணிகண்டன் என்பவர் அவருக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் இழப்பீடு போதாது என்று வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை முழுமையாக விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசுக்கும் , மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தனர்.


 அதில் குடிபோதையால் வாகனம் ஓட்டினால் ஏற்படும் தீமையையே சுட்டிக்காட்டுங்கள் என்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்றும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவரை கைது செய்யும்படியும் உத்தரவிட்டனர். அதேசமயம் அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment