கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்திய கடற்படைக்கான மருத்துவத் தேர்வை, இந்திய கடற்படை ஒத்திவைத்துள்ளது.
கடலோர காவல் படைக்கான இறுதி மருத்துவ தேர்வு ஐ.என்.எஸ் சில்காவில் வரும் ஏப்ரல் 17 அன்று நடக்கவிருந்தது. தற்போது இது, மறுஅறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடக்கும் தேதி, குறித்து கடலோரா காவல் படையின் www.joinindiancoastguard.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.
இதனை அவ்வ போது பார்த்து, தேர்வர்கள், தேர்வு தேதிக்கு ஏற்ற வகையில் தங்களது பயணத்தை திட்டமிட வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.யார் விண்ணப்பிக்கலாம்?அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது பள்ளிகல்விதுறை மூலமாக பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல் பாடங்களை தேர்வு செய்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைந்தது 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கு சிறப்பு பிரிவின் கீழ் மதிப்பெண்ணில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படுகிறது. இந்த 5 சதவீத தளர்வு, இந்திய கடலோர காவல்படை ஊழியர்களுக்கும் பொருந்தும். காலியிடங்கள், பதவிகள் குறித்த விரிவான தகவல்களுக்கு இந்திய கடலோர காவல் படையின் இணைய தளத்தில் காணலாம்.
No comments:
Post a Comment