கொரோனா அச்சுறுத்தலுக்காக அனைவரும் முகக்கவசம் அணிய தேவையில்லை. யார், எப்போது, எப்படி முகக்கவசம் அணிய வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை
அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக முன்னெச்சரிக்கையாக மக்கள் முகக்கவசங்களை அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
இதனால், அதன் விலை அதிகரித்து பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் யார் முகக்கவசம் அணிய வேண்டும் என டுவிட்டரில் அளித்துள்ள விளக்கம்
: மூன்று தரப்பினர் மட்டுமே மாஸ்க் அணிய வேண்டும்.
1. காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் திணறல் உள்ளிட்ட கொரோனா அறிகுறி
உள்ளவர்கள்
2. கொரோனா பாதித்த மற்றும் அறிகுறி உள்ளவர்களை கவனித்து கொள்பவர்கள்.
3. கொரோனா அறிகுறியுடன் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதார ஊழியர்கள். இவர்கள் மட்டுமே முகக்கவசம் அணி வேண்டும். மற்றவர்கள் அணிய வேண்டியதில்லை.
முகக்கவசம் எப்படி பயன்படுத்த வேண்டும்
* முகக்கவசத்தை மடக்க கூடாது.
* மூக்கு, வாய் முழுமையும் மூடும் விதத்தில் அணிய வேண்டும். காது பகுதியில் இடைவெளி இருக்கக்கூடாது.
* முகக்கவசம் ஈரமானதும் மாற்ற வேண்டும்.
* உபயோகித்த முகக்கவசத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. அதை முறையாக குப்பை தொட்டியில் போட வேண்டும்.
* முகக்கவசத்தை தொடக்கூடாது. கழுத்தில் தொங்க விடக்கூடாது.
* கழற்றியபின் ஆல்கஹால் கலந்த தண்ணீரால்
கைகளை கழுவ வேண்டும்.
இவ்வாறு சுகாதாரத்துறை குறிப்பிட்டுள்ளது.

No comments:
Post a Comment