கை கழுவுவது எப்படி: பள்ளிகளில் அறிவுரை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 10, 2020

கை கழுவுவது எப்படி: பள்ளிகளில் அறிவுரை

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போது, மாணவர்களுக்கு, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து, டாக்டர்கள் வாயிலாக, அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.



இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு சார்ந்த கருத்தரங்கம், சென்னையில், நேற்று நடந்தது. ரூ.218 கோடிஅதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது :


தேசிய போட்டிகள் மட்டுமின்றி, மாநில அளவில் விளையாடுவோருக்கும், இந்நிகழ்ச்சியில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.விளையாட்டு துறைகளில், மாணவர்களுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு துறைக்காக, இந்த ஆண்டு, 218 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை, நேரு விளையாட்டு மைதானத்தில், இந்திய தொழில் கூட்டமைப்புக்கு, ஓர் அரங்கு ஒதுக்கி தரப்படும்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர், ராமச்சந்திரன், கிரிக்கெட் விளையாட்டு வீரர், விஜய்சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.



நிகழ்ச்சிக்கு பின், நிருபர்களிடம், அமைச்சர் கூறியதாவது:முதல்வராக, இ.பி.எஸ்., பொறுப்பேற்ற பின், விளையாட்டு துறையில், பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களில், இளைஞர்கள் நலனுக்காக, விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.


விளையாட்டு துறை வாயிலாக, மாணவர்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க, முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.தற்போது, 221 விளையாட்டு வீரர்களின் பெயர்களை தேர்வு செய்து, இந்திய தொழில் கூட்டமைப்பிடம் வழங்கி உள்ளோம்.அவர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க, நிதியுதவி வழங்க, 100 பேரையாவது தேர்வு செய்வர் என, எதிர்பார்க்கிறோம்.



'கொரோனா' வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, முதல்வர் தலைமையில் ஆலோசனை நடந்தது. பள்ளிகளில், இறைவணக்க கூட்டத்தின்போது, டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வாயிலாக, கைகளை சுத்தம் செய்வது குறித்து, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment