பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு தரும் ஆசிரியர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 29, 2020

பாடல் மூலம் கொரோனா விழிப்புணர்வு தரும் ஆசிரியர்

உலகம் முழுவதும் கொரானோவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பும் அதிகரித்து வரும் வேளையில் அது குறித்த விழிப்புணர்வை அரசு பள்ளி ஆசிரியர் பாடல் மூலம் ஏற்படுத்தி வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் கழுகேர்கடை அரசு பள்ளி தலைமையாசிரியர் ஜான்கென்னடி 55,சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கட்டாயக்கல்வி, குழந்தைகளுக்கான கல்வி சார்ந்த பாடல்களை இயற்றி பாடியுள்ளார்.

 தமிழக சமச்சீர்கல்வி பாடப்புத்தகத்தில் 4 ஆம் வகுப்பிற்கான ஆங்கிலப்பாடநுாலின் ஆசிரியர்களில் இவரும் ஒருவர். மாநில நல்லாசிரியர் விருது பெற்றுள்ளார்.

 இவர் பணியாற்றி வரும் பள்ளி மாவட்ட அளவில் சிறந்த துாய்மைப்பள்ளி என்ற விருதைப்பெற்றுள்ளது.சமீப காலமாக உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பற்றி போதிய விழிப்புணர்வு இன்று வரை மக்களிடையே ஏற்படவில்லை


. பாடல்கள் மூலம் ஜான்கென்னடி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பொது இடங்களில் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க கை கழுவுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாகவைத்திருத்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்டவை பற்றி பாடல் எழுதி பிரச்சாரம் செய்து வருகிறார்

 .சமூக வலைதளங்களில் இவரது பாடல் வரவேற்பை பெற்றுள்ளன.ஸ்மூலில் இவர் பாடிய நிலவே என்னிடம் நெருங்காதே (பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடியது) என்ற பாடல் மெட்டில் கொரானோ வே என்னை விரும்பாதே, நீ விரும்பும் அழகன் நான் இல்லை என்ற பாடலும் , கடிதம் எழுதும் சாயலில் அன்புள்ள கொண்ட அப்பாவுக்கு மகள் கடிதம் எழுதும் சாயலில் உள்ள பாடலும்,


 நடிகர் விஜய் வில்லு படத்தில் பாடிய டாடி, மம்மி வீட்டில் இல்லை என்ற பாடல் மெட்டில் ஸ்கூல் ல ஸ்டூடன்ஸ் இல்லை, மால் லதான் மக்கள் இல்ல என்ற பாடலும் பிரபலமாகி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியரின் இந்த செயல் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.இவரை பாராட்ட : 97872 76446.

No comments:

Post a Comment