தமிழகம் முழுவதும் வரும் கல்வியாண்டில் 4,282 அரசுப் பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தப்படும் என்று முதல்வா் கே.பழனிசாமி அறிவித்தாா்.
தமிழகத்தில் புதிதாக 25 அரசு தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் வெள்ளிக்கிழமை படித்தளித்த அறிக்கை:-
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் புதிதாக 25 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், 10 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படும்.
வரும் கல்வியாண்டில் 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயா் நிலைப்பள்ளிகளாகவும், 30 அரசு உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும்.
அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதல் கட்டமாக 1,890 பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வரும் கல்வியாண்டில் மீதமுள்ள 4,282 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
No comments:
Post a Comment