துாய தமிழ் பற்றாளர் விருதுக்கு, மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பிற மொழி கலப்பில்லாமல், துாய தமிழ் பயன்படுத்துவோரை ஊக்குவிக்க, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்ககம், தமிழக அரசின் ஒப்புதலோடு, பரிசு திட்டம் ஒன்றை அறிவித்தது.பரிசு பெற, பலரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மதிப்பெண் அடிப்படையில், கோவையை சேர்ந்த மணிகண்டன், 27; அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த, அரிதாசு, 71; திருச்சியை சேர்ந்த ஆரோக்கிய ஆலிவர் ராசா, ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மணிகண்டன், முதுகலை பட்டம் பெற்று, ஆசிரியர் பயிற்சி பெற்று, வேலை தேடி வருகிறார். அரிதாசு, புதுச்சேரியில் பிறந்து, அரியலுார் மாவட்டம், உட்கோட்டை அரசு தொடக்கப் பள்ளியில், இரவு காவலராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
ஆரோக்கிய ஆலிவர் ராசா, திருச்சி துாய வளனார் கல்லுாரியில், இளம் அறிவியல், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்களுக்கு, சென்னை, கிண்டியில் உள்ள, எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை அரங்கில், இன்று நடக்க உள்ள, தமிழ் அகராதியியல் நாள் நிறைவு விழாவில், அமைச்சர் பாண்டியராஜன், பரிசு வழங்க உள்ளார்.

No comments:
Post a Comment