சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதலமைச்சர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, March 26, 2020

சமூக இடைவெளிக்காக செங்கலை எடுத்து ரோட்டில் வட்டம் போட்ட முதலமைச்சர்


கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று ரோட்டில் வட்டம் போட்டு முதல்வர் மம்தா பேனர்ஜி அறிவுறுத்தி உள்ளார்.


இந்தியாவில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்க தடைஇல்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் குறைந்தபட்சம் 1மீ இடைவெளி காக்க அறுவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி ஊரடங்கு உத்தரவு நடைமுறை நேரில் சென்று பார்வையிட்டார். கொல்கத்தாவின் ஜன் பஷார் பகுதிக்கு சென்ற அவர் வர்த்தகர்கள், விற்பனையாளர்களிடம் ஆலோசனை செய்தார்.

அப்போது அத்தியவாசிய பொருட்கள் வாங்கும் வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென்று ரோட்டில் செங்கலை எடுத்து வட்டமிட்டார்.

பொதுமக்களின் நலனுக்காக ரோட்டில் அவரே செங்கலால் வட்டமிட்ட செயலை பலர் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேற்குவங்கத்தில் கொரோனா வைரஸால் இதுவரை 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment