தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 13, 2020

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் வேலை!


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சேலம் மாவட்டத்தில் காலியாக உள்ள எழுத்தர், உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 மொத்தம் 30-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.60 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை - சேலம்


மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப்பணியிடங்கள் : 33

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

எழுத்தர் - 03

காவலாளி - 05

ஓட்டுநர் - 04

அலுவலக உதவியாளர் - 21

கல்வித் தகுதி:

எழுத்தர் - 8-வது தேர்ச்சி

காவலாளி - எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஓட்டுநர் - 8-வது தேர்ச்சி

அலுவலக உதவியாளர் -8-வது தேர்ச்சி

வயது வரம்பு :

18-வயது பூர்த்தியடைந்தவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எட்ஸ.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயதிற்கு உட்பட்டும், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதிற்கு உட்பட்டும், பொதுப்பிரிவினர் 30 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.


ஊதியம்:

எழுத்தர் - ரூ. 33,900 முதல் ரூ.50,400 வரையில்

காவலாளி - ரூ.33,700 முதல் ரூ.50,000 வரையில்

ஓட்டுநர் - ரூ.19,500 முதல் ரூ.62,000 வரையில்

அலுவலக உதவியாளர் - ரூ.33,700 முதல் ரூ.50,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Salem.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக 30.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு முறை : தகுதிப் பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது https://Salem.nic.in/ எனும் இணையதள பக்கத்தைக் காணவும்.

No comments:

Post a Comment