கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்புகள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, March 13, 2020

கூட்டுறவு சங்கத்தில் வேலை வாய்ப்புகள்!


தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் புதிய வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தேனி மாவட்ட கூட்டுறவு வங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட 20 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம் - தேனி


மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 20

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்

நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - 06

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் - 11

பணியாளர் கூட்டுறவுச் சிக்கன நாணய கடன் சங்கம் - 01

தொடக்க கூட்டுறவு வேளாண்மை முற்றும் ஊரக வளர்ச்சி வங்கி - 02

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.01.2019 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுப் பிரிவினர் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் :

நகர கூட்டுறவு வங்கி உதவியாளர் - ரூ.11,900 முதல் ரூ.32,450 வரையில்

தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் - ரூ.10,050 முதல் ரூ.54,000 வரையில்


பணியாளர் கூட்டுறவுச் சிக்கன நாணய கடன் சங்கம் - ரூ.15,000 முதல் ரூ.47,600 வரையில்

தொடக்க கூட்டுறவு வேளாண்மை முற்றும் ஊரக வளர்ச்சி வங்கி - ரூ.14,000 முதல் ரூ.48,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.drbtheni.net/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.03.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம் : ரூ. 250 (விண்ணப்பக் கட்டணத்தில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காண்க.)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.drbtheni.net/notification.php அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்

No comments:

Post a Comment