ஊடரங்கு இல்லாமலேயே கொரோனா கட்டுக்குள் வந்தது!! எந்த நாட்டில், எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, March 29, 2020

ஊடரங்கு இல்லாமலேயே கொரோனா கட்டுக்குள் வந்தது!! எந்த நாட்டில், எப்படி?


உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வைத்துள்ள நிலையில், தென்கொரியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமலேயே கொரோனாவை சமாளித்தது.


பள்ளி கல்லூரிகள் மட்டுமே மூடப்பட்டன. திரையரங்குகள், மால்கள், கடைகள் உள்பட அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. தென்கொரியாவில் கொரோனாவால் சுமார் 10,000 பேர்கள் பாதிக்கபட்டு இருந்தாலும் அவர்களில் 5000 பேர் அடுத்தடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


144 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர். இதற்கு காரணம் அங்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்கள் எங்கெல்லாம் சென்றார்கள் என்பதை ஜிபிஎஸ் மூலம் கண்டுபிடித்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் அவர்கள் யாரை எல்லாம் தொட்டார்கள் என்பதையும் கண்டுபிடித்து உடனடியாக அந்த நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்


அதைவிட முக்கியமாக தென்கொரிய பொதுமக்களும் அரசின் முயற்சிக்கு நூறு சதவீதம் ஒத்துழைப்பு கொடுத்தனர். மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததாக தெரிந்தால் மக்களே அரசு மருத்துவமனைக்கு முன் வந்து தங்களை பரிசோதித்துக் கொண்டனர். இதனால் தான் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே சிறந்த தீர்வாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment