ONLINE JEE EXAM - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, March 17, 2020

ONLINE JEE EXAM

கொரோனா வைரஸ் பயத்தை கருத்தில் கொண்டு, ஆலன் கல்வி நிறுவனம் ஜெஇஇ முதன்மை தேர்வு -2020க்கு தயாராகும் மாணவர்கள் நலன் கருதி, அரசாங்கத்தின் ஆலோசனைப்படி, பயிற்சி வகுப்புகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.


 மேலும், ஆன்லைனில் ஜெஇஇ மெயின் தேர்வை எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அந்நிறுவன இயக்குனர் நவீன் மகேஸ்வரி தெரிவித்தார். ஆன்லைனில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இந்த மாதிரி தேர்வு நடைபெறும். அது 75 கேள்விகளை கொண்டதாக 3 மணி நேரம் நடைபெறுவதாக இருக்கும்


. இந்த மாதிரி தேர்வு தொடர் மொத்தம் 10 பகுதி கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் மாணவர்கள் மாதிரி தொடர் தேர்வை எழுதுவார்கள் என்று கருதப்படுகிறது.

இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மாதிரி தேர்வுகளால் பயனடைந்துள்ளனர். ஜெஇஇ முதன்மை தேர்வு ஏப்ரல் 2020 என்.டி.ஏ.ஆல் முழுமையாக ஆன்லைனில் நடத்தப்படுகிறது


. onlinetestseries.in என்ற இணையதளத்தை பார்வையிடுவதன் மூலம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம். நுழைவுத்தேர்வு தயாரிப்பில் சமீபத்திய நிகழ்வுகளுடன் உலகெங்கிலும் உள்ள மாணவர்களுக்கு பயிற்சியளிப்பதும், ஆன்லைன் தேர்வுகளை சமாளிப்பதற்கான உத்திகளை கொண்டு மாணவர்களின் திறன்படுத்துவது இந்த ஆன்லைன் தேர்வின் நோக்கம்.

No comments:

Post a Comment