மாற்றுத்திறனாளிகள் 03.05.2020 வரை அரசுப் பணிக்கு திரும்ப விலக்கு அளித்து அரசாணை வெளியிடு. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, April 18, 2020

மாற்றுத்திறனாளிகள் 03.05.2020 வரை அரசுப் பணிக்கு திரும்ப விலக்கு அளித்து அரசாணை வெளியிடு.

GO NO : 03 , Date : 17.04.2020

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தவிர்க்க. அத்தியாவசிய பணிக்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உட்பட பல்வேறு துறைகள் பணியாற்றிட வேண்டும் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு , தடை உத்தவு பிறப்பிக்கப்பட்ட நாளான 24.03.2020 முதல் 14.04.2020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் தங்கள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து 15.04.2020 முதல் 03.05.2020 வரை மற்றும் மீண்டும் கால நீட்டிப்பு செய்யும் நேர்வில் அந்த காலத்திற்கும் சேர்த்து மாற்றுத்திறனாளிகள் அலுவலக பணிகள் மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ஆணை வழங்குமாறு அரசினை கோரியுள்ளார்.



மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் அவர்களின் கோரிக்கையை ஏற்று  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசுப் பணியாளர்களின் உடல் குறைபாட்டையும் , பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு , தடை உத்தரவு நீட்டிக்கப்பட்ட நாளான 15.04.2020 முதல் 03.05.2020 வரை அவர்கள் தங்கள் அலுவலகத்தில் பணி மேற்கொள்வதிலிருந்து விலக்களித்து ( Exemption ) அரசு ஆணையிடுகிறது

No comments:

Post a Comment