கரோனா நோய்த்தொற்று பாதிப்பை சமாளிப்பத்தற்காக இந்தியாவுக்கு அவசரகால நிதியாக 1 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு செய்துள்ளது உலக வங்கி.கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்காக இந்தியாவுக்கு ரூ.7 ஆயிரத்து 600 கோடியை (1பில்லியன் டாலர்கள்) அவசரகால நிதியாக வழங்குவதாக உலக வங்கி அறிவித்துள்ளது.
நோய்த்தொற்றால் பாதிக்கப்படவர்களை கண்டறிதல், தனிமைப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்துதல், புதியதாக தனிமைப்பிரிவு வார்டுகள், கரோனா குறித்த ஆய்வு மற்றும் மருத்துவ கருவிகளை, பாதுகாப்புக் கவசங்கள் வாங்குவதற்கு இந்த நிதி உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உலகின் ஏழை மக்கள் சுற்றுச்சூழல் ஆகியவைதான் பிரதான கவனம் என தெரிவித்துள்ள உலக வங்கி, கரோனா தீவிரத்தைக் குறைக்க அடுத்த 15 மாதங்களில் 160 பில்லியன் டாலர்கள் உதவித்தொகை அறிவிக்க உள்ளது.
உலக வங்கி முதற்கட்டமாக உதவியாக 25 நாடுகளுக்கு 1.9 பில்லியன் டாலர்கள் அறிவித்துள்ளது
. இதில் பாகிஸ்தானுக்கு 200 மில்லியன் டாலர்கள், ஆப்கானுக்கு 100 மில்லியன் டாலர்கள், மாலத்தீவுகளுக்கு 7.3 மில்லியன் டாலர்கள், இலங்கைக்கு 128.6 மில்லியன் டாலர்கள் வழங்கி உள்ளது. இந்தியாவுக்குக்தான் அதிக அவசரகால நிதியாக 1 பில்லியன் டாலர்கள் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment