10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 20, 2020

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், 'உயர்கல்விக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்கள் அவசியம்.

எனவே, தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு கட்டாயம் நடத்தப்படும். ஊரடங்கு முடிவடையும் நாளான மே 3 ஆம் தேதிக்குப் பின்னர் தேர்வு அட்டவணை தயார் செய்யப்படும். அதன்பின் முதல்வருடன் ஆலோசித்து  வழிகாட்டுதலின்பேரில் தேர்வுகள் நடத்தப்படும்.


ஊரங்கிற்குப் பின்னர் சூழ்நிலையைப் பொறுத்துதான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். ஊரடங்கு முடிந்த பின்னர், விரைவாக 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவுகள் வெளியாகும்.

தனியார் பள்ளிகள் கல்விக்கட்டணத்தை கட்டச் சொல்லி பெற்றோர்களை கட்டாயப்படுத்தக் கூடாதும், மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறினார்

No comments:

Post a Comment