10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தாகுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 8, 2020

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தாகுமா? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தமிழகத்தில் மார்ச் மாத இறுதியில் நடைபெற இருந்த 10ம் வகுப்புப் பொதுத் தேர்வு கரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்டது.


இந்த நிலையில், ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில், மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெறவிருந்த 10-ம் வகுப்புப் பொதுத் தேர்வு ரத்தாகுமா என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.


இது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, 10ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து முதல்வர் பழனிசாமிதான் முடிவு செய்ய வேண்டும் என்று பதிலளித்துள்ளார்

No comments:

Post a Comment