வரலாற்றில் இன்று ஏப்ரல் 18 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, April 17, 2020

வரலாற்றில் இன்று ஏப்ரல் 18

இன்றைய நாள் : ஏப்ரல் 18

கிரிகோரியன் ஆண்டு : 108 ஆம் நாளாகும்.

நெட்டாண்டு : 109 ஆம் நாள்.

ஆண்டு முடிவிற்கு : 257 நாட்கள் உள்ளன

இன்றைய தின நிகழ்வுகள்

1025 - போலசுலாவ் சுரோப்றி போலந்தின் முதலாவது மன்னராக முடி சூடினார்.

1506 - இன்றைய புனித பேதுரு பேராலயத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.


1521 - மார்ட்டின் லூதருக்கு எதிரான விசாரணைகள் இரண்டாம் நாளாக இடம்பெற்றது. தனது லூதரனியம் பற்றிய கற்பித்தலை நிறுத்த அவர் உடன்படவில்லை.

1797 - நியுவியெட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியர்களை வென்றனர்.

1835 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1864 - புருசிய-ஆஸ்திரிய கூட்டு இராணுவத்தினர் டென்மார்க்கைத் தோற்கடித்து சிலெசுவிக் மாகாணத்தைக் கைப்பற்றினர். அதன் பின்னர் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தை அடுத்து டென்மார்க் இம்மாகாணத்தை இழந்தது.

1880 - மிசூரியில் வீசிய புயல் காற்றினால் 99 பேர் உயிரிழந்தனர்.

1897 - கிரேக்கத்திற்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையே போர் மூண்டது.

1902 - குவாத்தமாலாவில் 7.5 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 800-2,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1906 - அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நகரில் 3,000 பேர் வரையில் உயிரிழந்தனர். நகரம் தீப்பிடித்தில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1909 - ஜோன் ஆஃப் ஆர்க் திருத்தந்தை பத்தாம் பயசினால் புனிதப்படுத்தப்பட்டார்.

1912 - கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலில் உயிர் பிழைத்த 705 பேர் நியூ யோர்க் வந்து சேர்ந்தனர்.


1930 - பிபிசி வானொலி தனது வழமையான மாலைச் செய்தி அறிக்கையில் இந்நாளில் எந்த செய்திகளும் இல்லை என அறிவித்தது

1942 - இரண்டாம் உலகப் போர்: யப்பானின் டோக்கியோ, யோக்கோகாமா, கோபே, நகோயா ஆகிய நகரங்கள் மீது அமெரிக்கப் போர் விமானங்கள் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டன.

1945 - இரண்டாம் உலகப் போர்: செருமனியின் எலிகோலாந்து என்ற சிறு தீவின் மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.

1946 - அனைத்துலக நீதிமன்றம் முதல் தடவையாக நெதர்லாந்தின் டென் ஹாக் நகரில் கூடியது.

1949 - அயர்லாந்து குடியரசு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

1954 - ஜமால் அப்துல் நாசிர் எகிப்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.

1955 - 29 நாடுகள் பங்குபற்றிய முதலாவது ஆசிய-ஆப்பிரிக்க மாநாடு இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் ஆரம்பமானது.

1958 - இலங்கையில் பண்டா-செல்வா ஒப்பந்தம் முறிவடைந்தது.

1980 - சிம்பாப்வே குடியரசு (முன்னாள் ரொடீசியா) அமைக்கப்பட்டது. கனான் பனானா அதன் முதல் குடியரசுத் தலைவரானார். ராபர்ட் முகாபே பிரதமரானார்.

1983 - லெபனானில் பெய்ரூட் நகரில் அமெரிக்க தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டனர்.

1993 - பாகிஸ்தான் அரசுத்தலைவர் குலாம் இசாக் கான் நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவையைக் கலைத்தார்.

1996 - லெபனானில் ஐநா கட்டிடம் ஒன்றின் மீது இசுரேல் எறிகணைத் தாக்குதல் நடத்தியதில் 106 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 - பகுதாது நகரில் பரவலான தற்கொலைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 198 பேர் கொல்லப்பட்டனர், 250 பேர் காயமடைந்தனர்.

2018 - சுவாசிலாந்தின் மன்னர் மூன்றாம் முசுவாத்தி நாட்டின் பெயர் இனிமேல் எசுவாத்தினி என அழைக்கப்படும் என அறிவித்தார்.

பிறப்புகள்

1838 - பவுல் எமில் புவபோதிரான், பிரான்சிய வேதியியலாளர் (இ. 1912)

1858 - ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை, ஈழத்து எழுத்தாளர், பதிப்பாளர் (இ. 1917)

1858 - தோண்டோ கேசவ் கார்வே, இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 1962)

1883 - சாமிக்கண்ணு வின்சென்ட், தமிழகத் திரைப்பட வெளியீட்டாளர், தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1942)

1884 - ஜான் ஆன்வெல்ட், எசுத்தோனிய அரசியல்வாதி (இ. 1937)

1905 - ஜார்ஜ் எச் ஹிட்சிங்ஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1998)

1910 - மால்கம் ஆதிசேசையா, இந்தியக் கல்வியாளர், பொருளியலாளர் (இ. 1994)

1919 - எசுத்தர் அவுவா ஒக்லூ, கானா தொழிலதிபர் (இ. 2002)

1941 - மைக்கல் டேனியல் ஹிக்கின்ஸ், அயர்லாந்தின் 9வது அரசுத்தலைவர்

1949 - பென் ஹொம்ஸ்சுடொரோம், நோபல் பரிசு பெற்ற பின்லாந்து பொருளாதார நிபுணர்

1967 - மரியா பெல்லோ, அமெரிக்க நடிகை, எழுத்தாளர்


1973 - ஹாய்லி கெப்ரசிலாசி, எத்தியோப்பிய ஓட்டப் பந்தய வீரர்

இறப்புகள்

1859 - தாந்தியா தோபே, இந்திய இராணுவத் தளபதி (பி. 1814)

1916 - ஜி. சுப்பிரமணிய ஐயர், இந்திய இதழியலாளர் (பி. 1855)

1955 - ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1879)

1973 - ஆல்பிரெடு ஆரிசன் ஜாய், அமெரிக்க வானியலாளர் (பி. 1882)

சிறப்பு நாள்

நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள்

விடுதலை நாள் (சிம்பாப்வே, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1980)

நண்பர்கள் நாள் (பிரேசில்)

கண்டுபிடிப்புகள் நாள் (யப்பான்)

இராணுவ நாள் (ஈரான்)

No comments:

Post a Comment