பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்-லைனில் பாடம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, April 2, 2020

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஆன்-லைனில் பாடம்

உடுமலை கல்வி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு, ஆன்-லைன் மூலம் நாள்தோறும் பாடம் நடத்தும் நடைமுறையை ஆசிரியர்கள் துவங்கியுள்ளனர்


.'கொரோனா' வைரஸ் பாதிப்பு காரணமாக, பள்ளிகளுக்கு மார்ச் முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மட்டுமே நிறைவு செய்யப்பட்டுள்ளது.



 பிளஸ் 1 வகுப்பில் ஒரு தேர்வும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முற்றிலுமாக எந்த தேர்வுகளும் நடத்தப்படவில்லை. மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு, இந்த விடுமுறையை வீணாகி விடக்கூடாது என்ற நோக்கத்தில், மொபைல் செயலி மூலம் ஆன்-லைனில் பாடம்நடத்தும் முயற்சியை உடுமலையில் துவங்கியுள்ளனர்.




மாணவர்களுக்கு, நாள்தோறும் ஒரு மணி நேரம் இந்த முறையில், பிளஸ் 2 வகுப்புகளுக்கான அடிப்படை பாடங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர். உடுமலை கல்வி மாவட்டத்தில், கலிலியோ அறிவியல் கழகத்தின் சார்பில் இம்முயற்சியை துவங்கியுள்ளனர்.



கணிதம், இயற்பியல், தமிழ், ஆங்கிலம், வேதியியல் பாடங்களில் அடிப்படைகளை அந்தந்த பாட ஆசிரியர்களின் உதவியோடு நடத்துகின்றனர். இதற்கு, கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜூம் என்ற செயலியை மொபைலில் ஏற்றிய பின்னர்,




 8778201926 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, செயலியை பயன்படுத்தி, பாடம் நடத்துவதில் பயன்பெறுவது குறித்து கேட்டு அறிந்து கொள்ளலாம்.ஆசிரியர்கள், சதீஸ்குமார், சரவணன், கண்ணபிரான், ரவிக்குமார், பாலகிருஷ்ணன் பாடம் நடத்துகின்றனர். விருப்பமுள்ள மாணவர்கள் இதில் இணைந்து, ஆன்-லைனில் பாடம் படித்து விடுமுறையை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ளலாம் என, கலிலியோ அறிவியல் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment