ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, April 21, 2020

ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல்

கொரோனா பரிசோதனைக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டை 2 நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.


 ரேபிட் டெஸ்ட் கிட்டை பயன்படுத்துவது குறித்து 2 நாட்களுக்கு பிறகு மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா நோய் தொற்று இருப்பதை விரைவாக கண்டறிய உதவும் ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ என்ற பரிசோதனை கருவிகள் இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டன.கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில், ரேபிட் கிட்டின் பரிசோதனை முடிவுகள் துல்லியமானதாக இல்லை எனக்கூறி ராஜஸ்தான் அரசு நிறுத்திவைத்தது.


 இந்த நிலையில், அடுத்த இரு நாட்களுக்கு கொரோனாவைக் கண்டறிய ரேபிட் கிட்களை பயன்படுத்த வேண்டாம் என்று இந்திய மருத்துவ அராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ரேபிட் கிட் கருவிகள் மாறுபட்ட முடிவுகளை காட்டுவதாக வெளியான தகவலையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

ரேபிட் கிட் டெஸ்ட் கருவிகளின் தரத்தினை பரிசோதித்து வருகிறோம், மீண்டும் இந்தக் கருவிகளை கொண்டு சோதனையை தொடங்குவது பற்றி விரைவில் அறிவுறுத்தல் வழங்கப்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment