ரூ .50,000 சம்பளத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை! கல்வித்தகுதி :MCA / BE / CA - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

ரூ .50,000 சம்பளத்தில் தேசிய வேளாண் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை! கல்வித்தகுதி :MCA / BE / CA

மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED) நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி மேலாளர், கணக்கு உதவி மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய வேளாண் கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (NAFED)


மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிட விபரங்கள்:

உதவி மேலாளர் (ஐடி) பிரிவில் காலியாக உள்ள ஒரு பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது

இப்பணியிடத்திற்கு எம்சிஏ, பி.டெக், பி.இ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடத்திற்கு மாதம் ரூ.50,000 ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முறை : உதவி மேலாளர் பணிக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய் ஆகும்.

உதவி மேலாளர் (கணக்கு):

உதவி மேலாளர் (அக்கவுண்ட்ஸ்) பணிக்கு மொத்தம் 4 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடத்திற்கு சிஏ (சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அல்லது பி.காம் படித்து, எம்பிஏ பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்


. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.47,600 முதல் ரூ.1,51,100 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பக்கட்டணம் 1000 ரூபாய் ஆகும்.

NAFED Recrutiment 2020 முக்கிய நாட்கள்:

விண்ணப்பப்பதிவு தொடங்கிய நாள் : 4 ஏப்ரல் 2020

விண்ணப்பப்பதிவு முடியும் நாள் : 21 ஏப்ரல் 2020

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://nafed-india.com/ என்னும் இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

Assistant Manager - II (Accounts) : http://182.74.122.83/NafedHRMs/JobList/ViewDetails?requirementId=3

Assistant Manager - II (IT) : http://182.74.122.83/NafedHRMs/JobList/ViewDetails?requirementId=2

No comments:

Post a Comment