5 மாநகராட்சிகள் முழு ஊரடங்கு அறிவிப்பு: எதுவெல்லாம் இயங்கும்?
சென்னை, கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் ஏப்ரல் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். அதேபோல், சேலம், திருப்பூரில் ஏப்ரல் 26 முதல் 28 வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்ததெந்த சேவைகளுக்கெல்லாம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.
1. மருத்துவம் தொடர்பான அனைத்து சேவைகளும் இயங்கும்.
2. காவல் துறை, மின்சாரத்துறை, ஆவின், உள்ளாட்சிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் ஆகியவை செயல்படும்
3.அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமைசெயலகம், சுகாதாராம் மற்றும் குடும்பநலத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகள் செயல்படும்.
4. இதர அரசு அலுவலகங்கள், வங்கிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு செய்ய 33 சதவீத பணியாளர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.
5. ஆன்லைன் மூலம் உணவகங்களில் ஆர்டர் செய்து உணவை பெற்றுக்கொள்ளலாம்.
6. அம்மா உணவகங்கள், ஏ.டி.எம் உள்ளிட்டவைகள் வழக்கம் போல் செயல்படும்.
7.முதியோர், மாற்று திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் முதியோர் உதவி புரிவோர் ஆகியோருக்கு அனுமதி வழங்கப்படும்.
8. ஆதரவற்றோருக்காக அரசால் நடத்தப்பட்டு வரும் சமையல் கூடங்கள் இயங்கும்.
9. ஏழைகளுக்கு உதவி செய்ய நினைப்போர் அரசு அலுவலரின் அனுமதியோடு உதவி செய்யலாம்.
10. கோயம்பேடு மார்க்கெட் உரிய விதி முறைகளின் படி இயங்கும்
11.காய்கறி, பழங்கள் போன்றவற்றை விற்பனை செய்யும் நடமாடும் கடைகளுக்கு அனுமதி.
12. பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படாது.
13. ஐ.டி தொழிலாளர்கள் வழக்கம் போல் வீட்டிலிருந்து பணியாற்றலாம்.
14. பிற தனியார் நிறுவனங்கள் செயல்படாது.
மேற்குறிப்பிடப்பட்ட மாநகராட்சிகளை தவிர பிற இடங்களில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கட்டுபாடுகள் தொடரும்.

No comments:
Post a Comment