கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர்.
பாரதி ஏர்டெல் நிறுவனம் இதனைக் கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ரூ.100 மற்றும் ரூ.200 மதிப்பிலான 'வொர்க் ஃப்ரம் ஹோம்' ஆட் ஆன் திட்டங்களை வழங்க முன்வந்துள்ளது.
புதிய ரூ.100 மற்றும் ரூ.200 ஆட் ஆன் திட்டங்கள்
இந்த புதிய ரூ.100 மற்றும் ரூ.200 வொர்க் ஃப்ரம் ஹோம்' ஆட் ஆன் திட்டங்களின் விளம்பர பதாகைகளை ஏர்டெல் தனது பயனர்களுக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது.
ஊரடங்கு நாட்களில் இணையத்தின் தேவை அதிகமாகியுள்ளது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு இந்த புதிய டேட்டா ஆட் ஆன் திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.
கூடுதல் டேட்டா பயனர்களுக்காக ஆட் ஆன் திட்டம்
பாரதி ஏர்டெல் தற்பொழுது அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கான ரூ.100 மற்றும் ரூ.200 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஏர்டெல்லின் ரூ.100 மதிப்பிலான ஆட் ஆன் திட்டம் பயனர்களுக்கு 15 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் ஏர்டெல்லின் ரூ.200 மதிப்பிலான ஆட்-ஆன் பேக் திட்டம் பயனர்களுக்கு சுமார் 35 ஜிபி அளவிலான டேட்டா நன்மையை வழங்குகிறது.
இந்த இரண்டு திட்டங்களும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்கள் அல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஆட் ஆன் திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது நிலவி வரும் சூழ்நிலையில் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களுக்கு உதவும் நோக்கத்தில் இத்திட்டங்களை விளம்பரம் செய்து வருகிறது.
40ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இதான் உங்களுக்கான திட்டம்
கூடுதல் டேட்டா தேவை இருக்கும் ஆர்வமுள்ள ஏர்டெல் பயனர்கள், ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பின் "Manage services" வழியாக இந்த ஆட் ஆன் பேக்குகளை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
இதைவிட அதிக டேட்டா நன்மை வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் ஏர்டெல்லின் ரூ .399 திட்டத்தைத் தேர்வு செய்துகொள்ளலாம். இதில் உங்களுக்கு 40ஜிபி டேட்டா வரம்பற்ற அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் ZEE5 சந்தாவும் கிடைக்கப்பெறுகிறது.
No comments:
Post a Comment