கொரோனா சிகிச்சைக்கு சொந்த மருத்துவமனையை அளித்த டாக்டர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, April 6, 2020

கொரோனா சிகிச்சைக்கு சொந்த மருத்துவமனையை அளித்த டாக்டர்

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசுக்கு தனது மருத்துவமனையை ஒப்படைத்துள்ள கோயம்புத்தூரை சேர்ந்த டாக்டரை பலரும் பாராட்டி வருகின்றனர்.




கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கால் ஆதரவற்று கிடக்கும் மக்களுக்கு பல சமூக ஆர்வலர்கள் உதவி வருகின்றனர்.



 மேலும், கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதல்வர் இபிஎஸ் நிதி வழங்குமாறு மக்களிடம் கோரிக்கை வைத்திருந்தார். இதனையேற்று பல தொண்டு நிறுவனங்கள் நிவாரணம் வழங்கி வருகின்றன. இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த டாக்டர் மகேஸ்வரன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசுக்கு தனது மருத்துவமனையை ஒப்படைத்துள்ளார்.



இது குறித்து 'சுப' மருத்துவமனையை நடத்தி வரும் டாக்டர் மகேஸ்வரன் கூறியதாவது: எங்கள் மருத்துவமனையை அரசு பயன்படுத்திக் கொள்ள சொல்வது பற்றி, எனது குடும்பத்தாரிடம் பேசினேன். அவர்கள் சம்மதித்ததும், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் எம்.எல்.ஏ., ஆகியோரிடமும் பேசினேன்.


 அவர்கள் மூலம் அரசுக்கு தகவல் கிடைத்து, முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து அழைத்து தகவல் கேட்டனர். அவர்களிடம், எங்களது மருத்துவமனையில் 60 படுக்கைகள் இருப்பதாக கூறினேன்.

அதற்கு அவர்கள், கொரோனோ நோயாளிகளை அரசு மருத்துவமனையில் வைத்து தான் சிகிச்சை கொடுக்க முடியும். எனவே, உங்கள் மருத்துவமனையை நாங்கள் வேறு உபயோகங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறோம், என்றனர்.



 எல்லோரும் அரசுக்கு பணமாக கொடுப்பதைவிட, நம்மால் முடிந்த பணிகளைச் செய்து அரசின் பணியை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து, இந்துஸ்தான் குழுமமும் தங்களது மருத்துவமனையை அரசு உபயோகத்துக்கு வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment