கரோனா அறிகுறி இருப்பவர்கள் தகவல் தெரிவிக்க புதிய செயலி: சென்னை மாநகராட்சி ஆணையர் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, April 1, 2020

கரோனா அறிகுறி இருப்பவர்கள் தகவல் தெரிவிக்க புதிய செயலி: சென்னை மாநகராட்சி ஆணையர்

கரோனா அறிகுறி இருப்பவர்கள், தகவல் தெரிவிக்க பிரத்யேகமாக புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.


சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் கரோனா அறிகுறி இருப்பவர்கள், இந்த செயலியை தங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அதில் செல்ஃபி எடுத்து செயலியில் அனுப்பினால் உடனடியான அவர்களுக்கான மருத்துவ வசதி ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் அவர்களை கண்காணிக்கவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டோர் மற்றும் சிகிச்சைப் பெறுவோரை கண்காணிக்கும் வகையிலும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.


சென்னை முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்புகளில் மாநகராட்சி பணியாளர்கள் தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அதே சமயம், தனித்து வைக்கப்பட்டவர்கள் இருக்கும் 2,500 வீடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் GCC Corona Monitoring என்ற ஆப்பை டவுன்லோடு செய்து, காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபரை செல்ஃபி எடுத்து, இருப்பிட விவரத்தையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment